கனிம வள திருட்டு என்ற பெயரில் விவசாயிகள் மீது போடப்படும் வழக்கு,மற்றும் அபராத தொகையை ரத்து செய்ய வேண்டும் என தமிழக விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்..
உழவர் தியாகிகள் தினத்தையொட்டி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், மின்கட்டண உயர்வை கண்டித்து நடந்த போராட்டத்தில் உயிர் தியாகம் செய்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தும் கூட்டம், கோவை திவ்யோதயா அரங்கில் நடைபெற்றது.
கோவை மாவட்ட தலைவர் சு.பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற இதில்,போராட்டத்தில் உயிர்நீத்த விவசாயிகளின் உருவப்படங்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது..
கூட்டத்தில், மின்கட்டண உயர்வை கண்டித்து நடந்த போராட்டத்தில் உயிர் தியாகம் செய்த விவசாயிகளுக்கு நினைவுத்தூண் அமைக்க வேண்டும். விவசாய பயிர்களை சேதப்படுத்தும் காட்டுயானைகள் உள்ளிட்ட விலங்குகளை கட்டுப்படுத்த வேண்டும்.
சேதமடைந்த பயிர்களுக்கு கேரளாவில் வழங்குவது போன்று அதிக இழப்பீடு வழங்க வேண்டும்.
கூட்டுறவு வங்கிகளில் பயிர் கடனுக்கு சிபில் ஸ்கோர் கட்டாய மாக்குவதை தமிழக அரசு மறுபரிசீலனை செய்து எளிதாக பயிர் கடன் கிடைக்க வழி வழிவகை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன..
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழக விவசாயிகள் சங்க தலைவர் சு.பழனிசாமி,கோவையின் முக்கிய நீர் ஆதாரமான நொய்யல் நதி மெல்ல மெல்ல அழிவை நோக்கி செல்வதாக வேதனை தெரிவித்த அவர்,நதியை பராமரிக்க ஒதுக்கும் நிதி எங்கே செல்கிறது என தெரியவில்லை என கேள்வி எழுப்பினார்..
ஆற்றின் அகலம் எவ்வளவு என்பதை கண்டறிந்து, எல்லைக்கல் நட வேண்டும். விவசாயிகளின் விளைபொருட்களுக்கு, கட்டுப்படியான விலை வழங்க வேண்டும் என தெரிவித்தார் தற்போது,கனிம வள திருட்டு என்ற பெயரில் விவசாயிகள் மீது போடப்படும் வழக்கு, அபராத தொகையை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார்..
கூட்டத்தில்,துணை தலைவர் பெரியசாமி, செயலாளர் மூர்த்தி, பொருளாளர் ஜீவானந்தம் உட்பட பலர் கலந்து கொண்டனர்…