மதுரை மாவட்டம் பாலமேட்டில் தமிழ்நாடு முக்குலத்தோர் நல சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் அங்குள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கௌரவ தலைவர் எஸ்.டி.எம். செந்தில்குமார், தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சோனைமுத்து, செயலாளர் ஆதிமுத்துக்குமார், ஆலோசகர் கார்த்திகேயன், இனைசெயலாளர் அனல்ராஜா(எ) நாகராஜா, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தலைவர் ஆர்.சார்லஸ் ரெங்கசாமி, கலந்து கொண்டு வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக டாக்டர் தனசேகரன் கலந்து கொண்டு பேசினார். பொதுக்குழு உறுப்பினர்கள் அணைவரும் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் பேசிய நிர்வாகிகள் மாதந்தோறும் நடைபெறும் கூட்டத்திற்கு நிர்வாகிகள் அணைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தனர் நடைபெற உள்ள இந்த மாத இறுதியில் 27.07.25 . ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில் அலங்காநல்லூர் சுபிக்ஷா மஹாலில் நடைபெற உள்ள 2024-2025 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு மற்றும் பதினொன்றாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற சோழவந்தான் தொகுதியை சேர்ந்த முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற உள்ளது.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக தொழிலதிபர்கள் அரசியல் பிரமுகர்கள் சினிமா பிரபலங்கள் உட்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர் இந்த விழாவில் சங்கத்தின் நிர்வாகிகள் தங்களது குடும்பத்துடன் கலந்து கொள்ள வேண்டும். என்று தெரிவித்தனர். அதனை தொடர்ந்து தமிழ்நாடு முக்குலத்தோர் நல சங்கத்தின் புதிய கொடியினை நிர்வாகிகள் அறிமுகம் செய்து வைத்தனர்.
மேலும் கொடிகள் தயாரிக்கப்பட்டு உள்ளது தேவைப்படுவோர் கொடியினை சங்கத்தில் வாங்கிக் கொள்ளலாம் வருகின்ற பரிசளிப்பு விழாவில் புதிய கொடி மண்டபம் அமைந்துள்ள பகுதியில் கட்டப்பட்டு நிகழ்ச்சி நடைபெறும் என்று தெரிவித்தனர். அரசு பணிகளில் ஓய்வு பெற்ற சங்கத்தின் நிர்வாகிகளுக்கு கைத்தறி ஆடை அணிவித்து வாழ்த்து தெரிவிததனர். கூட்டத்தின் முடிவில் பொருளாளர் குமரேசன் நன்றி கூறினார்.