அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது:
அரியலூரில் நடந்தது தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பின் வழிகாட்டுதலின்படி அரியலூர் மாவட்டத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் அக்டோபர் 15ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை கருப்பு பட்டை அணிந்து பள்ளியில் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்
அரியலூர் மாவட்டத்தில் மாநிலத் துணைத் தலைவர் அரியலூர் மாவட்ட செயலாளர் இ எழில் அவர்களின் வழிகாட்டுதலின்படி இந்த அறப்போராட்டம் நடந்து வருகிறது அரியலூர் ஒன்றியத்தில் மாவட்ட தலைவரும் வட்டார செயலாளர் ஆ சண்முகம் தலைமையிலும் திருமானூர் ஒன்றியத்தில் ரவிச்சந்திரன் தலைமையிலும் செந்துறை ஒன்றியத்தில் வட்டார செயலாளர் தங்க சிவமூர்த்தி தலைமையிலும் இதுபோல் அரியலூர் மாவட்டம் முழுவதும் இந்த கவனஈர்ப்பு போராட்டம் நடந்து வருகின்றது சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியம் தொடர வேண்டும் இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாட்டை கலைந்திட வேண்டும் டிஇடி இருந்து ஆசிரியர்களை முற்றிலுமாக பாதுகாத்திட வேண்டும் அரசாணை 243 கைவிடவும் ஊக்க ஊதியம் வழங்கிடவும் வேண்டும் எனவும் பெறப்பட்ட ஊதியத்திற்கு தணிக்கை தடையை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டும் என தமிழ்நாடு அரசு நிறைவேற்றிட வேண்டுமென கருப்பு பட்டை அணிந்து போராட்டம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் அரியலூர் மாவட்டம் முழுவதும் நடந்து வருகிறது