கும்பகோணம் அபிமுகன் தருமச்சாலை நிர்வாகி மகாலிங்க தேசிகர் பேசியதாவது .ஆனி மாத வழிபாடுகளான 27 நட்சத்திர பூஜைகள், சித்தர்களின் குருபூஜை மற்றும் தினமும் அன்றைய தினத்திற்கு உரிய சித்தர்களின் மாதாந்திர நட்சத்திர வழிபாடும் நடைபெறுகிறது. கடந்த 7 வருடங்களாக கும்பகோண சுற்றி சாலை ஓரத்தில் கடை வைத்திருப்பவர்கள், மற்றும் ஆதரவற்றோர் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு நேரில் சென்று அன்னதானம் வழங்கப்படுகிறது.
மேலும் குடும்பத்தினர் பிறந்தநாள் விழா,திருமண நாள் நினைவு நாள் ஆகிய நாட்களில் ஏழை எளிய மக்கள்,முதியவர்கள் ,ஆகியோருக்கு அன்னதானம் வழங்குகிறோம். மாணவ மாணவிகளுக்கு தேவாரம் பாடல்கள் கற்றுத் தருகிறோம். “ஏழை, எளிய மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும், மருத்துவ தேவைகளுக்கும் உதவி வருகிறது. மத நல்லிணக்கத்துக்கும், சமூக சேவைக்கும் எடுத்துக்காட்டாக திகழ்வதாக கூறிக்கொள்வதைவிட, அதை விளம்பரப்படுத்தாமல் செயலில் காட்டுவதே உண்மையான சேவை. இதற்காகவே இந்த அபிமுகன் தருமச்சாலை சார்பில், அனைத்து மதங்களின் விழாக்களையும் கொண்டாடுகிறோம்.”என்றார்