அரியலூர், ஜெயங்கொண்டத்தில் ‘தோற்றம்’ திரைப்படம் விமர்சன வரவேற்பு – நடிகர் இள பரத் ரசிகர்களுடன் திரையரங்கில் கலந்தாகுதல் பரபரப்பு!
பா வடிவேல் அரியலூர் செய்தியாளர்
அரியலூர் மாவட்டம் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கிய ‘தோற்றம்’ திரைப்படம் தமிழகம் முழுவதும் (ஜூலை 12) முதல் அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் ஆகிய நகரங்களில் வெற்றிகரமாக வெளியானது. ஜெயங்கொண்டம் நகரில் உள்ள முக்கிய திரையரங்கு ஜனகரில் முதல் காட்சியை பார்வையிட ஆண், பெண் ரசிகர்கள் பெருமளவில் திரண்டனர். அவர்களின் ஆவலும், திரைக்காட்சிக்கு முந்தைய எதிர்பார்ப்பும் திரையரங்கு முன் சிறு பரபரப்பை உருவாக்கியது.
இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இளம் நடிகர் இள பரத், அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியைச் சேர்ந்தவர் என்பதால், அவரது சொந்த மாவட்ட ரசிகர்கள் பெருமளவில் திரையரங்குகளை நோக்கி சென்றனர். திரைப்படத்தின் முதல் காட்சிக்கு இள பரத் திடீரென தானும் ரசிகர்களுடன் பொதுமக்களாக அமர்ந்து படம் பார்த்ததால் அங்கு இருந்தோர் ஆச்சரியத்துடன் மகிழ்ச்சி கொண்டனர்.
திரைப்படம் முடிந்ததும், இள பரத் மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகம் காணப்பட்டது. அவரை சூழ்ந்த ரசிகர்கள் அவருக்கு மலர்மாலை அணிவித்து, வாழ்த்துக்கள் தெரிவித்து புகைப்படங்கள் எடுத்து கொண்டனர். இது ஒரு தனி ரசிகர்போன்ற நட்சத்திரம் என்றும் பக்கத்து வீட்டு பையன் போலவே அவருடன் உற்சாகமாக நடந்துகொண்டார் என்பதே அனைவரின் மனங்களை கவர்ந்தது.
‘தோற்றம்’ திரைப்படம் சமூக சிந்தனையுடன் கூடிய சுவாரஸ்யமான திரைக்கதையை கொண்டதாகவும், இள பரத்தின் நடிப்பு பாராட்டுதலுக்குரியதாகவும், முதல் நாளே ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றதாகவும் ரசிகர்களிடையே கூறப்படுகிறது.