கரூர் மாவட்ட செய்தியாளர் மரியான் பாபு
கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நீச்சல் குளம் பணி துவக்கவிழாவினை
துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் ரூ. 6.28 கோடி மதிப்பீட்டில் நீச்சல் குளம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார். கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் முன்னிலை வகித்தார்.
கரூர் மாவட்டத்தில் 6.28 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய நீச்சல் குளம் அமைக்கப்படுகிறது. கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக ரூ. 6.28 கோடி மதிப்பீட்டில் 50 மீட்டர் நீளம், 25 மீட்டர் அகலம் அளவிலான நீச்சல் குளம் அமைக்கப்பட உள்ளது.
இந்நிகழ்ச்சியில் எம்.எல்ஏ க்கள். மாணிக்கம், சிவகாமசுந்தரி, மாநகராட்சி மேயர் கவிதா, துணை மேயர் சரவணன், மாமன்ற உறுப்பினர் வேலுச்சாமி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய திருச்சி மண்டலம் முதுநிலை மேலாளர் செந்தில், விளையாட்டு அலுவலர் குணசேகரன் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.