நிலகிரி
தமிழ்நாடு பள்ளி கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு தொடக்க ,நடு
நிலை, உயர்நிலை,மேல்நிலை பள்ளிகளில் சிறப்பாக செயல்படும் பள்ளிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் பேராசிரியர் அன்பழகன் விருது வழங்கப்பட்டு வருகிறது.இவ்விருதுதொடக்க,நடுநிலை பள்ளிகளில் ஒன்று மற்றும் உயர்நிலை, மேல்நிலைபள்ளிகளில் ஒன்று என தேர்வு செய்யப்பட்டு ஒரு மாவட்டத்திற்கு இரண்டு பள்ளிகள் வீதம் மொத்தம் 76சிறந்து செயல்படும் பள்ளிகளுக்கு வழங்கப்படுகிறது.

இதனை அடுத்து 2024- 25ம் கல்வி ஆண்டிற்கான பேராசிரியர் அன்பழகன் விருதுக்கு உதகை ஒன்றியம்,சோலாடா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, மாவட்ட மற்றும் மாநிலக் குழுவால் தேர்வு செய்யப் பட்டுள்ளது.
இப்பள்ளி மாணவர் சேர்க்கை, கல்வி செயல் பாடுகள் , கல்வி சாரா செயல் பாடுகள், பாட இணை செயல்பாடுகள், மாணவர்களின் தனித்திறமைகளை மேம்படுத்தும் மன்ற செயல் பாடுகள் , சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், போக்குவரத்து வசதி, காலை சிற்றுண்டி மற்றும் அரசு நலத்திட்டங்கள் என எல்லா செயல்பாடுகளையும் திறம்பட நடத்தி வருகிறது.
இந்த சிறப்பான செயல்பாடுகளுக்காக சோலாடா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு இவ்விருதுக்கான கேடயம் மற்றும் சான்றிதழை 6.7.25அன்று திருச்சியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி மற்றும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் K.N நேரு ஆகியோர் சோலாடா ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி பியூலா ரோஸ்லின் அவர்களுக்கு வழங்கினர்.
இவ்விழாவில் நீல கிரி மாவட்ட கல்வி அலுவலர் திரு. பார்த்த சாரதி மற்றும் உதகை வட்டாரக் கல்வி அலுவலர் N நந்தினி ஆகியோரும் விழாவில் கலந்து கொண்டு பள்ளிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து பாராட்டினர்.
மேலும் தமிழக அரசின் முன்னோடி திட்டமான எண்ணும் எழுத்தும் திட்டம் இப்பள்ளியில் சிறப்பாக செயல் படுத்தபட்டு, தமிழக அரசின் ,மாணவர்களின் அடிப்படைத் திறன்களை சோதிக்கும் 100 days Challange என்ற செயல்பாட்டிலும் சோலாடா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தேர்வு செய்யப்பட்டு அதற்கான சான்றிதழும் பள்ளிக்கு வழங்கப்பட்டது.
விருது பெற்ற இப்பள்ளியை மாவட்ட கல்வி அலுவலர், வட்டார கல்வி அலுவலர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், பெற்றோர் மற்றும் பொதுமக்கள் பாராட்டி வாழ்த்தினர்.