கரூர் மாவட்ட செய்தியாளர் மரியான் பாபு
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கரூர் புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட 58.25 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 13 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து , 3.35 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 3 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 18,332 பயனாளிகளுக்கு 162.22 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கரூர் திருமாநிலையூரில் ரூ.40.00 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி பேருந்து நிலையத்தை, கரூர் சட்டமன்ற உறுப்பினர் வி.செந்தில்பாலாஜி முன்னிலையில் திறந்து வைத்து பார்வையிட்டார்.