துறையூரில் பெருமாள் மலை ரோட்டரி சங்கம் சார்பில் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம்

துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் பாலக்கரை அருகே உள்ள கௌரி திருமண மண்டபத்தில் துறையூர் பெருமாள்மலை ரோட்டரி சங்கம் சார்பில் மாபெரும் இலவச கண் சிகிச்சை மருத்துவ முகாம் நடைபெற்றது.


துறையூர் கௌரி மஹாலில் துறையூர் பெருமாள்மலை ரோட்டரி சங்கம், கோவை சங்கரா கண் மருத்துவமனை என்.நடராஜன் நினைவு அறக்கட்டளை மற்றும் புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரி ரோட்டராக்ட் சங்கம், திருச்சி மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் சார்பில் மாபெரும் இலவச கண் சிகிச்சை மருத்துவ முகாம் நடைபெற்றது.சங்கத் தலைவர் ஜி.சேதுபதி தலைமையில் நடைபெற்ற இம்முகாமில் செயலாளர் எஸ்.விவேகானந்தன்,பொருளாளர் டாக்டர் ஆர் விஜயகுமார்,சமூக சேவை இயக்குநர் எம்.பெருமாள் கண் சிகிச்சை முகாம் சேர்மன் என்.நந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இம்முகாம் காலை 9மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற்றது. இம்முகாமில் கோவை சங்கரா கண் மருத்துவர்கள் கிருத்திகா, ஹரிணி, செவிலியர்கள், முகாம் அமைப்பாளர் ரமேஷ் உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் கண் மருத்துவ பரிசோதனையில் ஈடுபட்டனர்.இதில் கிட்ட பார்வை, துரப்பார்வை, கண்ணில் சீழ் வடிதல், கண்ணில் சதை வளர்ச்சி,பார்வை மங்கல்,கண்ணீர் நீர் வடிதல்,கண்ணில் நீர் அழுத்தம்,கண்புரை நோய்,தலைவலி,உள்ளிட்ட கண் சம்மந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் இலவசமாக பரிசோதனை செய்யப்பட்டது.இம்முகாமில் சுமார் 200 நபர்கள் கலந்து கொண்டனர்.

இதில் சுண்புரை மற்றும் கண் அறுவை சிகிச்சைக்கு சுமார் 110 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு முகாம் நாளன்றே கோவை சங்கரா கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.கோவை சங்கரா கண் மருத்துவமனைக்குச் சென்றுவர போக்குவரத்து வசதி, உணவு, இருப்பிடம், ஸ்கேன் பரிசோதனை, மருந்துகள் ஐஒஎல் லென்சுடன் கூடிய கண்புரை அறுவை சிகிச்சை ஆகியவை அனைத்தும் இலவசமாக வழங்கப்படும் என முகாம் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

இம்முகாமில் பெருமாள்மலை ரோட்டரி சங்க நிர்வாகிகள் 2024 – 25 சங்க நிர்வாக இயக்குநர்
கார்த்திகேயன்,உறுப்பினர் வளர்ச்சி இயக்குநர், திருமூர்த்தி,ரோட்டரி அறக்கட்டளை இயக்குநர் மாதவன்,பப்ளிக் இமேஜ் இயக்குநர் மோகன்,சங்க பயிற்றுநர் ஞானசேகரன்,
ரோட்டரி கனவு அட்டை சரவணன்,சிறப்பு திட்ட இயக்குநர் ரமேஷ்,பன்னாட்டு சேவை இயக்குநர் செந்தாமரைகண்ணன்,சங்க ஆலோசகர் ஸ்ரீனிவாசன்,நிர்வாக செயலாளர், மணிகண்ட ஆனந்த்,அவை பாதுகாவலர் லோகநாதன், குடும்ப கூட்டம் கனகராஜன், குடும்ப சுற்றுலா இளங்கோவன் , உறுப்பினர் சுற்றுலா சிவா மற்றும் புத்தனாம்பட்டி நேரு கல்லூரி ரோட்டராக்ட் மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *