நெய்வேலியில் என்.எல்.சி. இந்தியா சார்பில் நடந்த புத்தக கண்காட்சியின் ஒரு பகுதியாக சிறந்த குறும்படங்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் 52 குறும்படங்கள் திரையிடப்பட்டன. அதில் பவி பிக்சர் ஜெயம் செந்தில் தயாரித்து சிவாஜி சீனிவாசன் இயக்கத்தில் பாரதசிற்பி பிரனேஷ் நடிப்பில், செல்வா இசை, சுதாகர் ஒளிப்பதிவில் உருவான “தட்டுல காசு “ சிறந்த குறும்படமாக தேர்வானது. இதையடுத்து தட்டுல காசு குறும்பட குழுவினருக்கு இயக்குனர் சக்திவேல் பெருமாள்சாமி விருது வழங்கி பாராட்டினார்.