பா. வடிவேல் அரியலூர் செய்தியாளர்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு செயற்குழுக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட செயலாளர் தமிழ் மறவன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மாவட்டம் முழுவதிலும் இருந்து கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாகக் கலந்து கொண்டு கருத்துகளைப் பகிர்ந்தனர்.
இக்கூட்டத்தில் உரையாற்றிய சமூக நீதி பேரவை தலைவரும், முன்னணி வழக்கறிஞருமான க. பாலு, தனது சிறப்பான பேச்சின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அவர் கூறியதாவது:
“விழுப்புரத்தில் நடைபெற உள்ள போராட்டம், ஒரு சாதாரணக் கூட்டம் அல்ல அது தமிழக அரசியலில் புதிய திருப்புமுனையை உருவாக்கும் வரலாற்று சம்பவமாக அமையும். வன்னியர் சமூகத்திற்காக அறிவிக்கப்பட்ட 10.5% இடஒதுக்கீட்டை காக்கவில்லை. அதை பச்சை துரோகமாகச் செய்தவர்கள், நம்பிக்கையை துரோகப்படுத்தியவர்கள். முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை பதவியில் இருந்து கீழிறக்கும் தொடக்கப் புள்ளி விழுப்புரம் போராட்டம் ஆகும். இது ‘வன்னியர்களுக்கு துரோகம் செய்தோம், ஆட்சியை இழந்தோம்’ என்ற உணர்வை கொண்டு வரவைக்குமென்ற நிச்சயமான காட்சியாக அமையும் என தெரிவித்தார்
மேலும், ஜூலை 25ஆம் தேதி மருத்துவர் அன்புமணி தொடங்க உள்ள மாநிலளாவிய சுற்றுப் பயணம், பாமகவின் அரசியல் எழுச்சிக்கு வித்திடும் என்றும், வன்னியர் சமூகத்தின் உரிமைக்குரல் நாடெங்கும் புதுமைபட வெளிப்படும் என்றும் உறுதியுடன் தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில், மாநில வன்னியர் சங்க செயலாளர் வைத்தி, பாமக மாநில அமைப்பு தலைவர் டி.எம்.டி. திருமாவளவன், மத்திய மண்டல மாநில அமைப்புச் செயலாளர் சாமிதுரை, மாவட்ட பொருளாளர் வெற்றி செல்வி, நகரத் தலைவர் அழகுதுரை உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்று உரையாற்றினர்.
மாவட்டம் , ஒன்றியம், நகர அளவிலான கட்சி நிர்வாகிகள், ஆதரவாளர்கள் பலர் ஆர்வத்துடன் கலந்துகொண்டு கூட்டத்தைச் சிறப்பித்தனர். இது பாமகவின் எதிர்கால திட்டங்களுக்கான வலுவான அடித்தளமாக அமைந்தது.