காளப்பட்டி அனன் பள்ளியில் நடைபெற்ற இதில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு
கோயம்புத்தூர் சகோதயா சி.பி.எஸ்.இ., பள்ளிகளின் கூட்டமைப்பின் சார்பாக 46 வது ஆண்டு கால்பந்து போட்டிகள் கடந்த 12 ந் தேதி துவங்கி இரண்டு நாட்கள் கோவை காளப்பட்டி பகுதியில் உள்ள அனன் பள்ளியில் நடைபெற்றது..
மாணவர்களுக்கான கால் பந்து போட்டியாக நடைபெற்ற இதில், கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல் என பல்வேறு மாவட்டங்களை உள்ள 64 சகோதயா ஸ்கூல் காம்ப்ளக்ஸ் பள்ளிகளை சேர்ந்த அணிகள் கலந்து கொண்டன.
முன்னதாக போட்டிகளை அனன் சர்வதேச பள்ளியின் தலைவர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்.
விறுவிறுப்பாக நாக் அவுட் முறையில் நடை பெற்ற போட்டிகளில் 12 வயதுக்கு உட்பட்டோருக் கான போட்டியில் முதல் இடத்தை லிஸ்யூ பள்ளி மாணவர்கள் பிடித்து கோப்பையை கைப்பற்றினர்.. மவுண்ட் லிட்ரஸீ பள்ளி, இரண்டாவது இடத்தையும்,விவேகம் சீனியர் செகன்ட்ரி பள்ளி மூன்றாவது இடத்தையும், அமிர்தா வித்யாலாயம் பள்ளி, நான்காவது இடத்தையும் பிடித்தன.
தொடர்ந்து வெற்றி பெற்ற அணிகளுக்கு, அனன் பள்ளியின் முதன்மை முதல்வர் சந்திரசேகரன்,முதல்வர் நந்தகுமார் ஆகியோர் சான்றிதழ்கள்,மற்றும் பரிசுகள் வழங்கி கவுரவித்தனர்..