காங்கேயம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
காங்கேயம் அருகே ரேக்ளா போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகள்.!
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள சிவன்மலை கிரிவலப் பாதையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ரேக்ளா போட்டியை தமிழக செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். ஈரோடு எம்.பி.பிரகாஷ், திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் இல.பத்மநாபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
காங்கேயம் நகர்மன்ற தலைவர் சூரிய பிரகாஷ் வரவேற்றார். போட்டியில் காங்கேயம், தாராபுரம், உடுமலை, பொள்ளாச்சி, திருப்பூர் உட்பட பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த 335 ரேக்ளா வண்டிகள் கலந்து கொண்டன. 200 மீட்டர்,300 மீட்டர் அளவுகளில் நடத்தப்பட்ட போட்டிகளில் ரேக்ளா வண்டிகள் சீறி பாய்ந்தன.
அதில் வெற்றி பெற்ற வண்டி உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் காங்கேயம் வடக்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் கருணை பிரகாஷ், தெற்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் சிவானந்தம் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்