திருப்பூர் மாவட்டம் தாராபுரம் செய்தியாளர்
பிரபு
செல்:9715328420
உயர்மின் கோபுரத்துக்கு எதிர்ப்பு – மூலனூர் தட்டாரவலசு கிராமம் அருகே விவசாயிகள் தொடரும் உண்ணாவிரத போராட்டம்.
தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம் மூலனூர் தட்டாரவலசு கிராமம் அருகே, விவசாய நிலங்களில் டாடா நிறுவனம் உயர்மின் கோபுரங்கள் அமைக்க முயற்சிக்கின்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கடந்த ஐந்து நாட்களாக வெட்டுக்காட்டு தோட்ட பகுதியில் இரவு பகலாக தொடர்ச்சியான காத்திருப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தின் பின்னணி:
இந்த உயர்மின் கோபுர திட்டம் காங்கேயம் வட்டம் வெள்ளகோவில் ஒன்றியம் மூத்தநாயக்கன்வலசு முதல் தாராபுரம் வட்டம் தூரம்பாடி வரை உள்ள விவசாய நிலங்கள் வழியாக கடக்கிறது. விவசாயிகள் எதையும் அறியாமலேயே, டாடா நிறுவனம் தனது துணை நிறுவனமான “கே.எஸ்.” மூலம் கோபுரங்களை அமைத்து வருகின்றது.
விவசாயிகளின் குற்றச்சாட்டு:
விவசாய நிலங்களில் மின் கோபுரங்களை கட்டுவதால் நிலங்கள் பாதிக்கப்படுகின்றன.
விவசாயிகளின் அனுமதியின்றி பனைமரங்கள் வெட்டப்பட்டுள்ளன.
நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்படுகின்றன.
நிறுவனத்தால் தரப்படும் இழப்பீட்டு தொகை மிகவும் குறைவாக இருப்பதால் நியாயமான சந்தை மதிப்பு கருதப்படவில்லை.
மின் கோபுரங்களால் நிலத்தடி நீர் அளவு குறையும், மாடுபண்ணை வேளாண்மை பாதிக்கப்படும்.
விவசாயிகள் வலியுறுத்தியது:
“எங்கள் நிலங்களில் உயர்மின் கோபுரம் வேண்டாம்” என்ற கோரிக்கையை முன்வைத்த அவர்கள், மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். தொழில்நுட்ப வளர்ச்சி என்ற பெயரில் வாழ்வாதாரத்தை நசுக்கும் முயற்சியை ஏற்க முடியாது எனத் தெரிவித்துள்ளனர்.
போராட்டத்தில் உள்ளவர்கள்:
வெட்டுக்காட்டு தோட்டத்தைச் சேர்ந்த
மணிவேல்,முத்துச்சாமி,செல்லமுத்து,துரைசாமி,தமிழழகன்,சதானந்தம்,சக்திவேல்,முத்துக்குமார்,வித்யாலக்ஷ்மி ஆகியோர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பாதுகாப்பு கோரிக்கை:
விவசாயிகள் கூறுகையில், “டாடா நிறுவனத்தின் ஊழியர்கள் எங்கள் உயிருக்கு ஆபத்தாக உள்ளனர். ஆனால் காவல்துறை எங்களுக்கு பாதுகாப்பளிக்கவில்லை. இதனால் நாங்கள் மின் கம்பிகளில் கூட செட் அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்,” என தெரிவித்தனர்.