மாதவரம்,பொன்னியம்மன்மேடு ,கற்பகம் நகர் ,நாகவல்லி அவென்யூவில் அமைந்துள்ள வரசித்தி விநாயகர் ஆலயத்தில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இக்கோயிலில் முன்னதாக அணுக்கை விக்னேஸ்வர பூஜை, எஜமான சங்கல்பம், கோபூஜை , தனபூஜை , மகா கணபதி ஹோமம் ,,நவக்கிரக ஹோமம், பூர்ணாஹீதி தீபாராதனை நடைபெற்றது.

அதன்பின் நான்காம் கால யாகசாலை பூஜை, நாடி சந்தானம், உட்பட விசேஷ திரவிய ஹோமம் உட்பட யாத்ரா தானம் கணம் புறப்பாடு ஆகிய சிறப்பு பூஜைகள் சிவாச்சாரியார்களால் நடத்தப்பட்டு, பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரை மந்திரங்கள், மேளதாளம் முழங்க கோபுர கலசத்தின் மீது நீரை ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடைபெற்று பக்த கோடிகளுக்கு புனிதநீர் தெளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரின் அருளை பெற்று சென்றனர். அதன்பின்னர் வந்திருந்த அனைவருக்கும் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.

பக்தர்களின் வசதிக்காக அசம்பாவிதம் ஏதும் நடைபெற வண்ணம் மாதவரம் காவல் நிலைய போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை வரசித்தி வினாயகர் ஆலய நிர்வாக உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *