திருச்சிராப்பள்ளி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் படி , பக்கா, மரக்கால் குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்க தலைவர் இந்திரஜித் தலைமை வகித்தார். எழுத்தாளர்கள் ரமேஷ், பாலாஜி ,சிவசுப்பிரமணியன், சங்கரராமன், குகநாதன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். படி, பக்கா, மரக்கால் குறித்து திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் பேசுகையில்,பண்டைய தமிழர்களின் அளவை முறைகள் மிகவும் விசித்திரமானவை. அந்தக் காலகட்டங்களில் தமிழர்கள் மனக்கணக்குகள்தான் செய்தார்கள்.

பூச்சரங்கள் வாங்கும்போது நீட்டலளவான முழம் என்ற அளவினால் பயன்படுத்தும் முறையை இன்றும் வழக்கில் உள்ளதைப் பார்க்கலாம். பண்டைய கட்டடக்கலைகளிலும் முழம் என்ற அளவையே தமிழர்கள் பின்பற்றியிருக்கிறார்கள். இதற்குச் சான்றாகப் பல முழக்குச்சிகளை பயன்படுத்தியுள்ளனர்.
அளவைக்கருவிகளுள் பால், எண்ணெய்களை (நீர்மம்) அளப்பதற்குத் தமிழர்கள் உழக்கு என்ற அளவை உருவாக்கி இருக்கிறார்கள். அதற்குச் சான்றாக ஓர் உழக்கு, இரு உழக்கு அளவிலான செப்பு, பித்தளை, வெள்ளிப் பாத்திரங்கள் தமிழர்களின் அன்றாட வாழ்க்கையில் இன்றும் பயன்படுத்துவதைக் காணலாம்.

ஆகவே தமிழர்களின் அளவை முறைகள் தனித்துவம் வாய்ந்ததாக அமைகின்றன. பழந்தமிழர் அளவைகளில் எண்ணல், நிறுத்தல்,முகத்தல்,பெய்தல், நீட்டல், தெறித்தல், சார்த்தல் உள்ளது.

அதில் களத்தில் தானியத்தை அளப்பதற்கு மரக்கால் பயன்பட்டது. பெரிய மரக்கால், சின்ன மரக்கால் என வழக்கிலிருந்தன. வீட்டு உபயோகத்திற்குப் படி எனப்படும் இரும்பு அளவை பயன்பட்டது. பெரிய படி, அரைப்படி, கால்படி, அரைக்கால் படி, வீசம்படி, அரை வீசம்படி போன்ற படிகள் இன்று கூட வீடுகளில் உள்ளன.

படியை உழக்கு என்று குறிப்பிடுவார்கள். 11/2 லிட்டர் அளவு என்பது ஒருபடி ஆகும். நான்கு படி அளவு நெல் சேர்ந்தால் ஒரு பெரிய மரக்கால், இரண்டு படி அளவு நெல் சேர்ந்தால் ஒரு சிறிய மரக்கால் எனப்பட்டன. முதல் மரக்கால் நெல்லை சாக்கிற்குள் கொட்டும்போது, லாபம் என்று சொல்வார்கள்;

ஒன்று எனச் சொல்லும் வழக்கமில்லை
தானியங்களை அளப்பதற்கு கிலோ, குவிண்டால், டன் என ஆங்கிலேயே அளவீடுகள் வழக்கத்துக்கு வந்துவிட்டாலும் பாரம்பரியம்மிக்க படி, பக்கா, மரக்கால் போன்றவைதான் இன்னமும் பெரும்பாலான வீடுகளில் புழக்கத்தில் உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *