ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம், அம்மன்பட்டியை சேர்ந்த வாலிபர் நல்லுக்குமார் (23). தற்போது கமுதி -கோட்டைமேடு பகுதியில் வசித்து குடும்பத்துடன் வருகிறார். இவரை நேற்று முன்தினம் இரவு முதல் காணவில்லை என்று கமுதி காவல் நிலையத்தில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் அவரது குடும்பத்தினர் புகார் தெரிவித்தனர்.
இந்நிலையில் மரக்குளம் கிராமம் அருகே கருமேனியம்மன் கோவில் பின்புறம் கருவேல மர காட்டு பகுதியில் நல்லுக்குமார் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு விரைந்து சென்ற போலீசார்
நல்லுக்குமார் உடலை கைப்பற்றி கமுதி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்துநல்லுகுமாரின் தாயார் காளீஸ்வரி மண்டல மாணிக்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில்,போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
இந்த கொலை சம்பவம் நண்பர்களுக்கிடையே கொடுக்கல், வாங்கல் தகராறில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு, இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.