கொங்கு மண்டல பகுதிகளில் கடல்வழி போக்குவரத்து சார்ந்த வர்த்தகத்தை மேம்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் கூட்டம் கோவையில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது..

சென்னை துறைமுக ஆணையம், இந்திய வர்த்தக சபை கோவை கிளை ஆகியோர் இணைந்து நடத்திய இதில், மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கலந்து கொண்டார்..

கோவை,, திருப்பூர், பொள்ளாச்சி, ஈரோடு, சேலம் மற்றும் நீலகிரி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த தொழில் துறை அமைப்பினர் கலந்து கொண்ட இதில்,ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகத்தி்ல் உள்ள சவால்கள் குறித்து தொழில் துறையினர் ஆலோசனைகளை வழங்கினர்..

முன்னதாக நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், சென்னை துறைமுக ஆணையம், காமராஜர் துறைமுகம் ஆகியவற்றின் தலைவர் சுனில் பாலிவால், செய்தியாளர்களிடம் பேசினார்..

அப்போது பேசிய அவர்,சென்னை துறைமுகமும் காமராஜர் துறைமுகமும் இணைந்து கடந்த நிதியாண்டில் இதுவரை இல்லாத அளவாக 100 மில்லியன் டன் சரக்குகளுக்கும் அதிகமாக கையாண்டுள்ளதாக தெரிவித்த அவர்,
சென்னை துறைமுகம் 54.96 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளையும் காமராஜர் துறைமுகம் 48.41 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகள் என மொத்தம், இரு துறைமுகங்களும் 103.37 மில்லியன் மெட்ரிக் டன் அளவிற்கு சாதனைப் படைத்துள்ளதாக தெரிவித்தார்..

சென்னை துறைமுகம் ரூபாய் 1088.22 கோடி வருவாயையும் காமராஜர் துறைமுகம் ரூபாய் .1130.60 கோடி வருவாயையும் ஈட்டியுள்ளதாக குறிப்பிட்டார்..

கொங்கு மண்டல பகுதிகளில் குறிப்பாக வேகமாக தொழில் வளர்ச்சியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் கோவையில் உள்ள தொழில் அமைப்பினர் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்து சென்னை மற்றும் காமராஜர் துறைமுகங்களில் ஏராளமான கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துப்பட்டுள்ளதாக கூறிய அவர்,சென்னை மற்றும் காமராஜர் துறைமுகங்கள் யூரோப்,ஆஸ்திரேலியா,பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு நேரடி சேவையை விரைவாக செய்து வருவதாக தெரிவித்தார்…

கோவை மண்டலத்தில் கண்டெய்னர் வசதிகளுக்கென தனி இடத்தை விரைவில் அமைக்க உள்ளதாக தெரிவித்த அவர்,இதனால் கொங்கு மண்டல பகுதிகளில் உள்ள மாவட்டங்கள் பயனடையும் என தெரிவித்தார்..

இந்த சந்திப்பின் போது,இந்திய வர்த்தக சபை கோவை கிளை தலைவர் ராஜேஷ் பி லுந்த், சென்னை துறைமுக ஆணையத்தின் துணைத்தலைவர் விஸ்வநாதன், காமராஜர் துறைமுகத்தின் மேலாண்மை இயக்குநர் ஐரின் சிந்தியா,ஆகியோர் உடனிருந்தனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *