நெடுங்கல் ஊராட்சியில் உள்ள குடிநீர் இல்லாமல் தவிக்கும் ஜெய்னுர் மக்கள் குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள் .

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் ஒன்றியத்திற்கு உட்பட்ட நெடுங்கல் ஊராட்சிக்கு உடபட்ட ஜெய்னுர் கிராமத்தில் சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் வர வில்லை என்றும் ஒருநாள் மட்டுமே வந்த நிலையில் கடந்த 7 நாட்களாக தண்ணீர் வரவில்லை என்றும் கூறப்படுகிறது. ஒரு குடம் குடிநீர்ருக்காக மணிக்கணக்கில் நிர்க்க வேண்டிய நிலை உள்ளது.

தண்ணீர் பிடிக்க சிறுவர்கள்முதல் பெரியவர்கள் வரை தண்ணீருக்காக வேலைக்கும், பள்ளிக்குச் செல்ல முடியாமல் கிராம மக்கள் தவித்து உள்ளனர். இது குறித்து இது குறித்து காவேரிப்பட்டினம் வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணனிடம் கேட்டபோது இதுவரை எனது கவனத்துக்கு வரவில்லை அதுகுறித்து ஊராட்சி மன்ற செயலாளரிடம் கூறி சரி செய்து சீரான குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வதாக தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *