தஞ்சாவூர் மாவட்டம்:திருவோணம் பதிவு எண் 27/2024 தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் தஞ்சாவூர் தெற்கு மாவட்டம் சார்பில் விவசாயிகள் ஆலோசனை கூட்டம் திருவோணம் ஒன்றியம் ஊரணிபுரம் ஒன்றிய மாவட்ட அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாநில பொருளாளர் வி.எஸ்.வீரப்பன் தலைமை தாங்கினார்.தஞ்சாவூர் தெற்கு மாவட்டம் பொருளாளர் மற்றும் முன்னாள் காவல்துறை உதவி ஆய்வாளர்பெரி. சௌந்தரராஜன் , திருவோணம் ஒன்றிய தலைவர் என். ராமசாமி ,ஒன்றிய பொருளாளர் துறை.முருகேசன், ஒன்றிய ஒருங்கிணைப்பு குழு தலைவர் சி.நல்லகண்ணு ,
புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி ஒன்றிய செயலாளர் எம்.தங்கசாமி,ஊரணிபுரம்
நகர தலைவர் என்.சந்திரசேகர், நகர கௌரவத் தலைவர்ஏ. ஜேசுராஸ் ,தளிகைவிடுதி ஊராட்சி செயலாளர்எஸ்.எம்.முருகேசன் ஆகியோர் முன்னிலையில் புதிய உறுப்பினராக சேர்ந்து கொண்ட சி.ஆர். அன்பழகன்,மின்சாரத்துறை போர் மேன் வி. கோவிந்தராஜ், கே.முருகேசன் ஆகியோர் இணைந்து கொண்டனர். இவர்களை வாழ்த்தி வரவேற்றார்கள்.