மதுரை யாதவர் பண்பாட்டுக் கழகம்(டிரஸ்ட்) மற்றும் காந்தி மகன் அறக்கட்டளை(மதுரை) இணைந்து நடத்திய மாபெரும் இலவச பொது மருத்துவ முகாமில்சாதனை படைத்த இளம் கலைஞர்களுக்கு தமிழ் விருது வழங்கியது.
மதுரை சர்வேயர் காலனியில் உள்ள யாதவர் பண்பாட்டு கழக வளாகத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

இந்த மருத்துவ முகாம் நடைபெறுவதற்கு முன்னதாக பரத நாட்டியம், தமிழ் மேடைப் பேச்சு போன்றவற்றில் சாதனை படைக்கும் இளம் கலைஞர் களுக்கு தமிழ் விருதுகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சிக்கு காந்தி மகன் அறக்கட்டளை நிறுவனர் ஏ. வெங்கடேசன் வரவேற்று தொகுப்புரை வழங்கினார் இந் நிகழ்ச்சியில் நடைபெற்ற மருத்துவ முகாமில் அதிக நபர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இதில் சர்க்கரை அளவு, இதயம், பொது மருத்துவம், எலும்பு உறுதித் திறன் பரிசோதனை காது கேட்கும் திறன் பரிசோதனைகள் நடத்தப்பட்டன.

மருத்துவ முகாமை யாதவர் பண்பாட்டு கழகமும்(மதுரை) காந்தி மகன் அறக்கட்டளையும் (மதுரை) இணைந்து நடத்தின. இந்த மருத்துவ முகாமில் பங்கேற்ற நபர்களுக்கு மருந்து , மாத்திரைகள் இலசமாக அளிக்கப்பட்டன.

மேலும் முகாமில் பங்கேற்றவர்கள் மேற்கொள்ளும் மருத்துவ பரிசோதனை களுக்கு சிறப்பு கட்டண சலுகை அளிக்கப்பட்டது. இம் மருத்துவ முகாமில் மதுரை பை பாஸ் சாலையில் உள்ள அரிஸ்டோ மருத்துமனை மருத்துக் குழுவினர் பங்கேற்று மருத்துவ மனை நடத்தியது.

இந்நிகழச்சிக்கு யாதவர் பண்பாட்டுக் கழகம் தலைவர் பேராசிரியர் கண்ணன் தலைமை தாங்கினார்.ஓய்.சி.ஏ செயலாளர் சந்தான கிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
இந் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திறன் மேம்பாட்டு திட்டம் (மதுரை) உதவி இயக்குனர் செந்தில் குமார் , யாதவ மகா சபை தலைவர் ஜெயக்குமார் பங்கேற்று வாழ்த்துரை வழங்கி இளம் சாதனை கலைஞர்களுக்கு விருது வழங்கி கௌரவித்தனர் .

விழாவில் பரத நாட்டியத்தில் சாதனை படைக்கும் மா.செ.மித்ரா, திருக்குறள் ஒப்புவித்தல் திறனில் சாதனை படைக்கும் பிரணவ் கார்த்திக், தமிழ் உரை வீச்சில் சாதனை படைக்கும் சிறுமி லக்ஷிதா மணி பாலா, ஜெய பிரியா ஆகியோருக்கு விழாவில் தமிழ் விருதுகள் வழங்கி பாராட்டப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *