போடிநாயக்கனூர் 16 வது வார்டில் சுகாதார பணிகள் நகராட்சி நகர் மன்ற தலைவர் பார்வை தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சியில் ஒரு வாரத்துக்கு ஒரு வார்டு என்ற அடிப்படையில் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளையும் சுகாதார பணிகள் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது
இதன்படி போடிநாயக்கனூர் 16ஆவது வார்டு பகுதிகளில் மக்களை தேடி நகராட்சி நிர்வாகம் திட்ட முகாம் நடைபெற்றது இதில் வார்டில் உள்ள அனைத்து தெருக்களிலும் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது
மேலும் வார்டின் மையப் பகுதிகளில் சாக்கடை கால்வாய் தூர்வாருதல் குப்பைகளை அகற்றுதல் மற்றும் குடியிருப்பு பகுதிகள் மற்றும் மைதான பகுதிகளில் முட்புதர்கள் அகற்றப்பட்டன குப்பைகளைப் பிரித்து வழங்குவது
ஒரு முறையே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் நெகிழிகளை தவிர்த்து நம்முடைய பாரம்பரிய மஞ்சள் பை பயன்படுத்துவது குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது
இந்த பணிகளை நகராட்சி நகர் மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் நகராட்சி ஆணையாளர் எஸ் பார்கவி ஆகியோர் பார்வையிட்டனர் இந்த ஆய்வின் போது நகராட்சி நகர் மன்ற உறுப்பினரும் பொதுக்குழு உறுப்பினருமான எம் சங்கர் நகராட்சி பொறியாளர் குணசேகரன் மேலாளர் முனிராஜ் சுகாதார அலுவலர் மணிகண்டன் நகர்மன்றத் துணைத் தலைவர் கிருஷ்ணவேணி பச்சையப்பன் நகர திமுக செயலாளர் ஆர் புருஷோத்தமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்