மேட்டுப்பாளையத்தில் ரோட்டரி சங்கம் நடத்தும் மெட்ரோ மெட்ரிகுலேஷன் பள்ளியின் 50வது ஆண்டு பொன் விழா நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு பங்கேற்று மாணவர்கள் மத்தியில் சிறப்புரையாற்றி னார்.
அப்பொழுது சைலேந்திரபாபு போட்டித் தேர்வுகளில் சாதித்த மாணவர்கள் ஒவ்வொருவரும் சுய கட்டுப்பாடாக சமூக வலைதளங்களின் பயன்பாட்டை முற்றிலுமாக இரண்டு ஆண்டுகள் வரை தூக்கி எறிந்து தான் தேர்வுகளில் சாதித்துள்ளனர்
எனவே சாதிக்க நினைக்கும் மாணவர்கள் ஒவ்வொருவரும் சமூக வலைதளங்களில் இருந்து தங்களது நேரங்களை குறைத்து படிப்படியாக முற்றிலும் அதிலிருந்து வெளியே வந்தால் மட்டுமே சாதிக்க முடியும்
வளர்ந்த நாடான சீனா அமெரிக்காவை விட 20% கல்வியில் முன்னோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் எனவே அவர்களுடன் நாம் போட்டியிட வேண்டும் என்றால் தேவையில்லாமல் சமூக வலைதளங்களில் நேரத்தை செலவிடுவதை தவிர்க்க வேண்டும் என பேசினார்
மேலும் செல்போன் வைத்துள்ள ஒவ்வொருவரிடமும் சைபர் குற்றங்கள் நடைபெற அதிக வாய்ப்புகள் இன்று இருப்பதாகவும் பணியில் உள்ளவர்களிடம் கூட வேலை இருக்கிறது அதிக பணம் சம்பாதிக்கலாம் போன்ற ஆசை வார்த்தைகளை கூறி இந்தியாவில் மட்டுமின்றி அதற்கு வெளியே இருக்கும் கம்போடியா, பிலிப்பைன்ஸ் போன்ற வெளிநாடுகளில் இருந்தும் சைபர் குற்றங்கள் நிகழ்த்தப்படுவதாகவும் எனவே படித்தவர்கள் படிக்கத் தெரியாதவர்கள் என அனைவரையும் ஏமாற்றக்கூடிய சைபர் குற்றவாளிகளிடமிருந்து ஒவ்வொருவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் அவர் பேசினார்.