தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பெருமாள் தெரு, சண்முகம்புரம், தாமோதரன் நகர் ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் சரிவர வரவில்லை என்று மாநகராட்சி மேயர் ஜெகனுக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
இதனை அடுத்து புதன்கிழமை இரவு 7 மணி அளவில் தாமோதரன் நகர் பகுதியில் ஆய்வு மேற்கொள்ள மேயர் ஜெகன் தன்னந்தனியாக களத்தில் இறங்கினார்.
லெவிஞ்சிபுரம் டேங்கில் இருந்து தாமோதரன் நகர் பகுதிக்கு வரும் மெயின் பைப்லைன், ASKR கல்யாண மண்டபம் பகுதியில் உள்ள மெயின் பைப் லைனை துண்டித்துவிட்டு, வேறு பைப்லைனை போட்டு அடைத்து வைத்தார்.
அங்கு தன்னந்தனியாக மேயர் ஜெகன் பணிகளை பார்வையிட்டு கொண்டு, அங்கு இருந்த கிளம்பி, பெருமாள் தெருவில் ஒவ்வொரு வீடாக நேரில் சென்று மேயர் ஜெகன் குடிநீர் வருகிறதா என்றும், எத்தனை நாட்களாக குடிநீர் வரவில்லை என்றும், இப்போது வருகிறதா என்றும் மேயர் ஜெகன் கேட்டறிந்தார்.
அப்போது பாதிக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு குடிநீர் சரியான முறையில் புதன் கிழமை இரவு வரை வந்து கொண்டிருந்தது. ஆனால் தற்போது சுமார் நூறு வீடுகளுக்கு மேல் குடிநீர் வராமல் இருப்பதாக பொதுமக்கள் கூறினர்.
அந்த வீடுகளுக்கும் நேரில் சென்று மேயர் ஜெகன் குடிநீர் வருகிறதா வரவில்லையா என்று பார்வையிட்டு, பின்பு மாநகராட்சி வால்வு ஆபரேட்டர் ஒப்பந்ததாரர் ஆகியோரிடம், அதற்கான விபரங்களை கேட்டு அறிந்து, உடனடியாக ஜேசிபி இயந்திரத்தை வரவழைத்து பணிகளையும் துவக்கி வைத்தார்.
பாதி பணிகள் இரவு முடிந்து விட்டது. மீதிப் பணிகளை வியாழக்கிழமை காலை பணிகளை செய்ய வேண்டும் என்று மாநகராட்சி பணியாளர்களுக்கும் ஒப்பந்ததாரருக்கும் மேயர் ஜெகன் உத்தரவிட்டார்.
இரவு 8 மணி முதல் நடு இரவு 12 மணி வரை ஒவ்வொரு வீடாக சென்று குடிநீர் வருகிறதா என்று ஆய்வு செய்தது மக்கள் மத்தியில் மாநகராட்சி மேயர் ஜெகனுக்கு நல்ல பெயரை கொடுத்துள்ளது.
அங்கு இருந்த பொதுமக்கள் இதுவரைக்கும் இருந்த மேயர்களில் குடிநீர் வரவில்லை, ரோடு சரியில்லை என்று கூறினால் அதிகாரிகளை தான் அனுப்புவார்கள். ஆனால் எங்களின் கோரிக்கையை ஏற்று வீடு வீடாக வந்து குடிநீர் வருகிறதா என்று கேட்டறிந்தது, எங்களுக்கு இப்படி ஒரு மேயர் கிடைத்தது பாக்கியம் என்று மேயர் ஜெகனை பொதுமக்கள் பாராட்டினர்.
5 மணி நேரம் தாமோதரன் நகர், சண்முகபுரம், பெருமாள் தெரு ஆகிய பகுதிகளில் நடந்தே சென்று குடிநீர் பணிகளை பார்வையிட்டது, குடிநீர் வராமல் இருந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கண்டது, பொதுமக்கள் மத்தியில் பெரிதும் பாராட்டும் விஷயமாக உள்ளது.
இதுபற்றி மேயர் ஜெகன், தமிழக முதலமைச்சர் உத்தரவின் பெயரில், உள்ளாட்சித் துறை அமைச்சர் கே என் நேரு ஆலோசனையின்படி, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆணையின்படி, மாநகர மக்களுக்கு தேவையான வசதிகளை, கண்டிப்பாக இந்த திராவிட மாடல் அரசு உங்களுக்கு செய்யும் என்று மேயர் ஜெகன் மக்கள் மத்தியில் கூறினார்.
இதுவரை இரவு நேரத்தில் எந்த ஒரு மேயரும் மக்கள் பணியை பார்வையிடமாட்டார்கள். ஆனால் மாநகராட்சி மேயர் ஜெகன் ஐந்து மணி நேரம் தன்னந்தனியாக வீடு வீடாக குடிநீர் தொடர்பான ஆய்வு மேற்கொண்டு குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு கண்டது மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
அதன் பிறகு இரவு நேரத்தில் மீண்டும் பொது மக்களை சந்தித்த மேயர் ஜெகன், குடிநீர் எப்படி வருகிறது என்று பெருமாள் தெரு பொதுமக்களிடம் கேட்டறிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.