திருவண்ணாமலை மாவட்டம்,போளூர் வட்டம், கல்வாசல் கிராம மலையடிவாரத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ வீரமாகாளி அம்மனுக்கு ஆடி அமாவாசையை முன்னிட்டு, 11ஆம் ஆண்டு, 108 பால்குடம் எடுத்துச் சென்று அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டனர். நிகழ்ச்சியில் சுற்றுவட்டார கிராமத்தினர், ஊர் பெரியவர்கள், மற்றும் இளைஞர்கள், திரளாக கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.