துறையூர் நகராட்சி பள்ளியில் 4,5,6வது வார்டுகளில் “உங்களுடன் ஸ்டாலின்”முகாம்
துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சிக்கு உட்பட்ட நான்கு ஐந்து ஆறு வார்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகம் ஜீலை 25ந் தேதி நகராட்சி பள்ளியில் நடைபெற்றது.முகாமை எம்எல்ஏ ஸ்டாலின் குமார் துவக்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
இதில் வட்டாட்சியர் மோகன், ஆணையர் வாசுதேவன், நகர் மன்ற தலைவர் செல்வராணி, துணை தலைவர் மெடிக்கல் முரளி, காவல் ஆய்வாளர் முத்தையன்,பொறியாளர் செந்தில்குமார், சுகாதார ஆய்வாளர் முரளி, நகர் மன்ற உறுப்பினர்கள் முத்துமங்கனி பிரபு,ஹேமா, இளையராஜா மற்றும் நகர துணை செயலாளர் பிரபு, இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.இம் முகாமில் அனைத்து அரசு துறையினர், பொது மக்கள் கலந்து கொண்டனர்.இதில் மகளிர் உரிமை தொகை வாங்க அதிக பெண்கள் ஆர்வமுடன் மனு அளித்தனர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்