டைம்ஸ் ஆஃப் தமிழ்நாடு செய்தி எதிரொலியாக வலங்கைமான் அருகே உள்ள வீராணம் ஊராட்சியில் நீண்ட காலமாக பழுதடைந்த மின் கம்பம் மாற்றி புதிய மின் கம்பம் நிறுவப்பட்டது. பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் வீராணம் ஊராட்சியில் படப்பக்குடி சாலையில் பல ஆண்டுகளாக பழுதடைந்த மின் கம்பம் உள்ளது. இதனை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் விபத்து ஏற்படும் முன் மாற்றித் தர வேண்டும் என திருக்கருகாவூர் மின் வாரிய அலுவலகத்தில் வலியுறுத்தி வந்தனர். கடந்த மாதம் புதிய மின் கம்பம் வந்து வைத்தனர். ஆனால் அதை மாற்றி அமைக்காமல் இருந்து வந்தனர்.
இது குறித்து நமது டைம்ஸ் ஆஃப் தமிழ்நாடு இல் படத்துடன் செய்தி வெளியானது. அதனையடுத்து திருக்கருகாவூர் மின் வாரிய அலுவலகத்தில் இருந்து அலுவலர் மற்றும் ஊழியர்கள் வந்து பழைய மின் கம்பத்தை மாற்றி புதிய மின் கம்பத்தை நிறுவினர். இதனையடுத்து அப்பகுதி பொதுமக்கள் திருக்கருகாவூர் மின் வாரிய அலுவலருக்கும் மற்றும் ஊழியர்களுக்கும், செய்தி வெளியிட்ட டைம்ஸ் ஆஃப் தமிழ்நாடு க்கும் நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொண்டனர்.