தூத்துக்குடி பனிமயமாதா கோவில் கொடியேற்றத்தை முன்னிட்டு தவெக மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் குளிா்பானங்களை வழங்கினாா்.
தூத்துக்குடி உலக புகழ்பெற்ற இந்த பேராலயத்தின் 443ம் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொடியேற்றத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு தமிழக வெற்றி கழக தலைவரும் நடிகருமான விஜய் உத்தரவிற்கிணங்க, பொதுச்செயலாளர் ஆனந்த் ஆலோசனை படி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் பால், பழம், மேங்கோ ஜீஸ் பாட்டில், ரஸனா, பிஸ்கட் பாக்கெட், தண்ணீர் பாட்டில், ஆகியவற்றை வழங்கினார். நிகழ்ச்சியல் தமிழக வெற்றிக்கழகத்தை சேர்ந்த பலர் கலந்து கொண்டனா்.