செங்குன்றம் செய்தியாளர்
சென்னை மாநகராட்சி மாதவரம் 31 வது வார்டு கதிர்வேடு பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது.
இதனை மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் மற்றும் மாமன்ற உறுப்பினர் சங்கீதாபாபு ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.
இதில் வருவாய் துறை, குடிநீர் வழங்கல் துறை ,மின்சார துறை ,மக்கள் நலன் துறை ,காவல் துறை உட்பட 14 துறைகளை சேர்ந்த அதிகாரிகள் முகாமில் பங்கேற்று பொதுமக்களின் குறைகள் அடங்கிய 1000 ற்கும் மனுக்களை பெற்று அதற்கான தீர்வை விரைவில் செய்து தருவதாக உறுதியளித்தனர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.