மதுரை, ஜூலை.20-மதுரை மீனாட்சி அம் மன் கோவிலில் ஆடி முளைக்கொட்டு திரு விழா கொடியேற்றத்துடன் தொடங்குகியது.
மதுரை மீனாட்சி சுந்தரே சுவரர் கோவிலில் 12 மாதங் களும் திருவிழா நடைபெறும். அதிலும் மீனாட்சி அம்மனுக்கு மட்டும் தனியாக 4 திருவிழாக்கள் நடைபெறும். அவை ஆடி முளைக்கொட்டு திருவிழா, ஐப்பசிகோலாட்ட – உற்சவம், நவராத்திரி கலை விழா, மார்கழி எண்ணெய் காப்பு திருவிழா ஆகியவை ஆகும்.
அதில் ஆடி முளைக்கொட்டுத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ஆகஸ்டு 5-ந் தேதி வரை நடைபெறும். அதைதொடர்ந்து 10 நாட்கள் . திருவிழா நடைபெறும். விழவில் தினமும் மீனாட்சி அம் மன் பஞ்சமூர்த்திகளுடன் காலை, மாலை ஆகிய இரு நேரமும் சிறப்பு நாதஸ்வர இன்னிசை யுடன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பர்.7-ம் நாள் திருவிழாவில் இரவு வீதி உலா முடிந்த பின் உற்சவர் சன்னதியில் அம்மன், சுவாமி மாலை மாற்றும் வைபவம் நடைபெறும்.
விழா நடைபெறும் நாட் களில் கோவில் சார்பாகவோ, உபயதாரர்கள் சார்பாகவோ, மீனாட்சி அம்மனுக்கு தங்க ரத உலா, உபயதிருக்கல்யா ணம் போன்ற சேவைகள் பதிவு செய்து நடத்திட இயலாது என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.