தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் அப்துல்கலாம் நினைவு நாளினை முன்னிட்டு பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.
ஆசிரியர் ஸ்ரீதர் வரவேற்றார்.தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார்..தேவகோட்டை நகராட்சி ஆணையாளர் கண்ணன் தலைமை தாங்கி நிகழ்வில் பேசுகையில் , அப்துல் காலம் எளிமையானவர் .பல சாதனைகளுக்கு சொந்தக்காரர்.
இளைஞர்களை,மாணவர்களை பெரிதும் கவர்ந்தவர்.உலகத்திற்கே விடிவெள்ளியாக திகழ்ந்தவர்.ஏழ்மை குடும்பத்தில் பிறந்து மிக உயர்ந்த இடத்திற்கு சென்றவர்.விஞ்ஞானம் மனித குலத்திற்கு மேம்பாடு அடைய உதவ வேண்டுமென அரும்பாடு பட்டவர்.
சிறு,சிறு வேலைகளை நீங்களே செய்து கொள்ளுங்கள்.அப்படிதான் காலம் அய்யா வாழ்ந்தார்.அவரது நினைவு நிகழ்வில் பங்கேற்றதை பெருமையாக எண்ணுகிறேன் என்று பேசினார். அப்துல்கலாமின் கவிதை,பொன்மொழிகள்,பேச்சு கூறியவர்களுக்கும் ,அப்துல்கலாம் ஓவியம் வரைந்தவர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது.நிறைவாக ஆசிரியை முத்துலெட்சுமி நன்றி கூறினார்.