தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
திருப்பூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் ஆதரவுடன் பெருந்தலைவர் காமராஜ் பிறந்த நாளை முன்னிட்டு மூலனூர் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
கோயமுத்தூர் சங்கரா கண் மருத்துவமனை மட்டும் தாராபுரம் அருகில் உள்ள போழரை கலைக்கோவில் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இணைந்து தாராபுரம் சாரா நர்சிங் கல்லூரி நிறுவனர் டாக்டர் எம் ஜெயராணி மற்றும் திருப்பூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் ஆதரவுடன் பெருந்தலைவர் காமராஜ் பிறந்த நாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
போழரை கலைக்கோவில் வித்யா மந்திரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது இந்தப் பள்ளியின் தாளாளர் பொறியாளர் எண் சுந்தரம் தலைமையில் இந்த பள்ளியில் முதல்வர் எண் அரிமா நெஞ்சன் நிர்வாக அலுவலர் எஸ் சிவக்குமார் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த முகாமில் கல்வியாளர் டாக்டர் எம் ஜெயராணி தொடங்கி வைத்தார் இந்தப் பள்ளி ஆசிரியர்கள் அலுவலகப் பணியாளர்கள் மாணவ மாணவிகள் மற்றும் சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.
முன்னதாக நிகழ்ச்சி அமைப்பாளர் ஆர்.ராமர் அனைவரையும் வரவேற்றார்.