தென்காசி,
தென்காசி ஊராட்சி ஒன்றியம் ஆயிரப்பேரி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் ஆயிரப்பேரி சேவை மையத்தில் நடைபெற்றது. இதில் ஆயிரப்பேரி மற்றும் மத்தளம்பாறை ஊராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை வழங்கினார்கள்.
தென்காசி ஊராட்சி ஒன்றியம் ஆயிரப்பேரி ஊராட்சி பகுதியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்கு ஆயிரப்பேரி ஊராட்சி மன்ற தலைவர் தி. சுடலையாண்டி தலைமை தாங்கினார். மத்தளம்பாறை ஊராட்சி மன்ற தலைவர் மைதிலி மகேஷ், தென்காசி மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் ஆயிரப்பேரி தி. உதய கிருஷ்ணன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரையும் ஆயிரப்பேரி ஊராட்சி செயலர் ந.ஆறுமுகம் வரவேற்று பேசினார்.
இந்த முகாமில் பொதுமக்கள் மகளிர் உரிமைத்தொகை, முதியோர் உதவித்தொகை, ஊனமுற்றோர் உதவித்தொகை, கைம்பெண் உதவித்தொகை, ஆதார் அட்டை, சொத்துவரி, குடிநீர் வசதி, உரிமங்கள் மற்றும் அனுமதி, கழிவு நீர் இணைப்பு, அடிப்படை வசதிகள் பராமரிப்பு, பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள், காலி நில வரி, தெரு வியாபாரி அடையாள அட்டை, சொத்துவரி பெயர் மாற்றம், பட்டாவில் பெயர் மாற்றம் மற்றும் பட்டா பெயர் திருத்தம், பட்டா சிட்டா நகல், பிறப்பு, இறப்பு சான்றிதழ், வாரிசு சான்றிதழ், சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ். மாற்றுத் திறனாளிகள் உபகரணங்கள், ஆதிதிராவிடர்களுக்கு தாட்கோ மூலம் கடன், கடன்க.ள் உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை தென்காசி வட்டாட்சியர் மணிகண்டன், தென்காசி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாரியப்பன், மா.மாணிக்க வாசகம், சமூகநலத்துறை வட்டாட்சியர் பாபு, வருவாய் ஆய்வாளர் முகமது முஸ்தபா,
கிராம நிர்வாக அலுவலர்கள் ஆயிரப்பேரி முத்துக் குமாரசாமி, மத்தளம்பாறை, கிருஷ்ணவேணி ஆகியோரிடம் பொதுமக்கள் மனுக்களை வழங்கினார்கள்
இந்த முகாமில் மகளிர் உரிமைத் தொகை கேட்டு 123 மனுக்களும், பட்டியலிடப்பட்ட சேவை தொடர்பான 130 மனுக்களும் , பட்டியலிடப்படாத சேவை தொடர்பான
139 மனுக்களும் உட்பட மொத்தம் 392 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.
இந்த முகாமில்
தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சுரண்டை வே.ஜெயபாலன், தென்காசி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் டாக்டர் கலை கதிரவன், தென்காசி ஒன்றிய திமுக செயலாளர் ஆர்.எம்.அழகுசுந்தரம்,
ஆயிரப்பேரி ஊராட்சி மனறத் துணைத் தலைவர் கே. ரேகா, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் எஸ்.பட்டமுத்து, எஸ்.முத்துலெட்சுமி, எம். இசக்கிப்பாண்டி, கே.முருக செல்வி, எஸ்.முகமது இப்ராகிம், மத்தளம்பாறை ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வேலம்மாள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் வே. சஞ்சீவ் குமார், சுசீந்திரன், இசக்கி பாண்டியன், ஊராட்சி செயலாளர்கள் பாட்டபத்து கணபதி, சில்லரைப்புரவு நா.வெங்கடாச்சலம், பிரானூர் ஆ ராஜா,மகளிர் சுய உதவிக் குழுக்களின் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் மத்தளம்பாறை ஊராட்சி செயலர் இ.சங்கர சுப்பிரமணியன் அனைவருக்கும் நன்றி கூறினார்.