திருச்சி மாவட்டம் துறையூர் வட்டாரம் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை சார்பாக சிங்களாந்தபுரம் கிராமத்தில் மல்பெரி சாகுபடி தொழில்நுட்பம் மற்றும் நவீன வெண் பட்டுப்புழு வளர்ப்பு தொழில்நுட்பம் குறித்து விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது.
இப்பயிற்சிக்கு துறையூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் வீரமணி தலைமை வகித்தார். வேளாண்மை அலுவலர் கமல் வேளாண்மை துறையின் திட்டங்கள் பற்றி பேசியபோது, கோடை உழவு செய்தல், கோடை உழவுக்கு ஒரு ஏக்கருக்கு ரூபாய் 800 மானியம் வழங்குதல், உயிர் உரங்கள் மானியத்தில் வழங்குதல், விதை நெல் உளுந்து மானியத்தில் வழங்குதல் மற்றும் உழவன் செயலி பயன்பாடு குறித்தும் விவசாயிகளுக்கு கூறினார். பட்டு வளர்ச்சித் துறை உதவி பட்டு வளர்ச்சி ஆய்வாளர் சூர்யா மல்பெரி சாகுபடி குறித்தும் நவீன வெண் பட்டுப்புழு வளர்ப்பு தொழில்நுட்பம் குறித்தும் விவசாயிகளுக்கு விரிவாக கூறினார்.
மண்ணை
க. மாரிமுத்து.