செய்தியாளர் பார்த்தசாரதி
புதுவை விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை நவமால்காப்பேர் கிராமத்தில் காசி விசுவநாதர் ஆலயத்தில் காசி விசாலாட்சிக்கு அம்மனுக்கு ஆடிப்பூரத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது
நவமால்காப்பேர் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை ஆடிப்பூரத்தை முன்னிட்டு காசி விசாலாட்சி அம்மனுக்கு வாசனை திரவத்தினால் அபிஷேகம் மற்றும் அர்ச்சனைகள் மிகவும் விமர்சையாக நடைபெற்றது இதில் அம்மனுக்கு வளையல் மாலை பூ அலங்காரம் மாங்கல்யத்துடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்
இதில் ஊர் தலைவர்கள் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர் கிராமத்தில் உள்ள பெண்கள் வளையல் எடுத்து அம்மனுக்கு மாலையாக சாத்தினர் பெண்கள் அவரவர்கள் வேண்டுதலையும் நிறைவேற்றினர்
இதனைத் தொடர்ந்து ஆலயத்துக்கு வந்த பெண்களுக்கு மாங்கல்யம் மஞ்சள் குங்குமம் மற்றும் வளையல்களும் வழங்கப்பட்டது இதில் ஏராளமான பெண்கள் அனைவரும் கலந்து கொண்டனர் இதனைத் தொடர்ந்து அன்னதானமும் வழங்கப்பட்டது