தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பாடல்கள் ஒப்புவித்தல் போட்டிகளில் முதல் பரிசினை வென்ற மாணவர்களுக்கு பரிசுகளும்,சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
அரசு இசைப்பள்ளி சார்பில் நடைபெற்ற பாடல்கள் ஒப்புவித்தல் போட்டிகளில் வெற்றி பெற்று முதல்,இரண்டாம்,மூன்றாம் பரிசுகளை வென்ற தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.ஆசிரியை முத்துலெட்சுமி வரவேற்றார்.
தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கி மாணவர்களுக்கு பரிசுகளையும்,சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டு தெரிவித்தார். இப்பள்ளியின் நந்தனா,ரித்திகா,அஜய்,ஹாசினி,அபர்ணா,சாதனாஸ்ரீ , மோனிகா,மாலினி ஆகியோர் முதல் பரிசு பெற்று விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.15க்கும் மேற்பட்ட மாணவர்கள் சான்றிதழ் பெற்றனர்.ஆசிரியை முத்துமீனாள் நன்றி கூறினார்.