உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்ட மனுக்களுக்கு உடனடி தீர்வு
தமிழக முதலமைச்சர் அறிவித்த திட்டமான உங்களுடன் ஸ்டாலின் முகாம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது
அதன் அடிப்படையில் தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளிலும் நான்கு மண்டலமாக பிரிக்கப்பட்டு ஒரு மண்டலத்திற்கு 15 வார்டு என பிரிக்கப்பட்டு முகாம் நடைபெற்று வருகிறது முதல் கட்டமாக கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட வார்டுகளில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மாநகராட்சி நிர்வாகத்திற்கு பெறப்பட்ட மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டு 101 பேருக்கு ஆணை வழங்கப்பட்டது
தற்போது இரண்டாம் கட்டமாக மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட வார்டுகளில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு அதற்கான ஆணை பொதுமக்களுக்கு இன்று வழங்கப்பட்டது
மாநகராட்சி அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் ஜெகன் கலந்து கொண்டு 45 பொதுமக்களுக்கு அதற்கான ஆணைகளை வழங்கினார் அப்போது மேயர் ஜெகன் பேசுகையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் 45 வார்டுகளுக்கு முடிந்துள்ளது உள்ளாட்சி துறைக்கு பெறப்பட்ட மனுக்கள் மீது அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து அதன் அடிப்படையில் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு இன்று ஆணை வழங்கப்படுகிறது
பருவமழை தற்போது துவங்க உள்ளது அதன் அடிப்படையில் அதிமுக ஆட்சியில் மாநகராட்சியில் மழை நீர் செல்வதற்கு மூன்று வழித்தடம் தான் இருந்தது ஆனால் மூன்று வருட மாநகராட்சி நிர்வாகத்தில் 11 வழித்தடங்கள் உள்ளது
8 மழை நீர் செல்லும் வழித்தடங்கள் புதியதாக அமைக்கப்பட்டுள்ளது நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் கேரி பை முற்றிலும் தவிர்க்க வேண்டும் மாநகரில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் வளர்க்கப்பட்டுள்ளது மாநகரை பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது
53 பூங்கா செயல்பாட்டில் உள்ளது மாநகரம் இன்னும் பசுமையாக மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது பிரதான சாலையில் ஃபேவர் பிளாக் பதிக்கப்பட்டு வருகிறது மக்கள் எங்கு அதிகமாக கூடுகிறார்களோ அங்கு சாலைகளை தூய்மையான முறையில் அமைக்கப்படுகிறது
ஏழு முக்கிய இடங்களில் கேரிப்பை விற்பனை செய்வதாக கண்டறியப்பட்டுள்ளது அவர்களிடம் விற்பனை செய்யக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது உங்களுடைய ஆதரவு மாநகராட்சி எப்போதும் தேவை மாநகராட்சி நிர்வாகம் உங்கள் வீடு தேடி தினசரி வந்து கொண்டுள்ளது இவ்வாறு மேயர் ஜெகன் கூறினார்