தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் சீரான முறையில் குடிநீர் வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில் மாநகரில் உள்ள அனைத்து மக்களுக்கும் குடிநீர் வேண்டும் என்ற எண்ணத்தில் தூத்துக்குடி மாநகரில் புதியதாக கருப்பு பைப்லைன் பதிக்கப்பட்டு வீடுகளுக்கு புழு கலர் பைப் மூலம் இணைப்பு கொடுக்க மாநகராட்சி ஒப்பந்தம் கூறப்பட்டு அதன் அடிப்படையில் ஒப்பந்ததாரர் நியமிக்கப்பட்டு மாநகரில் கருப்பு பைப்லைன் பறிக்கப்பட்டு வீடுகளுக்கு புழு கலர் பைப்பு பதித்து கொடுக்க வேண்டும் என்று ஒப்பந்தம் அதன் அடிப்படையில் ஒப்பந்ததாரர் பணிகளின் செய்தார்
ஆனால் இதில் என்ன வேடிக்கை என்றால் ஒரு வார்டில் 50 முதல் 60 வீடுகள் வரை ஒப்பந்ததாரர் ப்ளூ கலர் பைப் லைன் இணைப்பு கொடுக்காமல் விடுபட்டு உள்ளது தற்போது முன்பு பைப்பு மூலம் வந்த குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது கருப்பு பைப்லைன் மூலம் மட்டும்தான் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது
அதன் அடிப்படையில் புளு கலர் பைப்லைன் பதிக்கப்படாத வீடுகளுக்கு குடிநீர் வராத சூழ்நிலையில் ஏற்பட்டதை அடுத்து வீட்டில் உள்ள பொதுமக்கள் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் பணிகளை செய்த ஒப்பந்தக்காரர்களிடம் பொதுமக்கள் கேட்டபோது எந்த ஒரு பதிலும் கிடைக்கவில்லை அதன் பின்பு ஒப்பந்ததாரர் எந்த வீடுகளுக்கெல்லாம் ப்ளூ கலர் பைப்லைன் பறிக்க வில்லையோ அந்த வீட்டின் உரிமையாளரிடம் 4000 முதல் 6000 வரை பணம் வாங்கப்பட்டு ஒப்பந்ததாரர் ப்ளூ கலர் பைப் லைன் பதித்து கொடுக்கிறார்
மாநகராட்சியில் இருந்து ஒப்பந்ததாரருக்கு பணம் வழங்கப்படுகிறது ஆனால் அந்த ஒப்பந்ததாரர் விடுபட்ட வீட்டின் உரிமையாளர்களிடம் பணம் வாங்குகிறார் இது தொடர்பாக பலமுறை பொதுமக்கள் மாநகராட்சி நிர்வாகத்திற்கு புகார் அளித்துள்ளனர் ஆனால் புகார் அளித்தும் மாநகராட்சி நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை இது பொதுமக்கள் மத்தியில் திமுக அரசு மீதும் மாநகராட்சி மீதும் பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
ஆகையால் உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் விடுபட்ட வீடுகளுக்கு புளு கலர் பைப் லைன் பதிக்க ஒப்பந்ததாரை எங்கெல்லாம் பணம் வாங்கினாரோ பணத்தை திருப்பி வழங்க உத்தரவிட வேண்டும்
மேலும் ஒப்பந்ததாரர் மீது கடும் நடவடிக்கை மாநகராட்சி நிர்வாகம் எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மாநகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர். இது பற்றி தமிழக வெற்றிக்கழக மாநகர நிர்வாகி முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் ஆனந்தகுமார் கூறுகையில் மாநகராட்சி ஆதரவுடன் தான் ஒப்பந்ததாரர் பணத்தை வசூல் செய்து வருகிறார் ஒவ்வொரு வீட்டிலும் 4000 முதல் 5000 வரை ஒப்பந்ததாரர் பணத்தை வசூலித்துக் கொண்டு ஆட்கள் மூலம் ப்ளூ கலர் பைப் லைன் இணைப்பு கொடுக்கப்பட்டு வருகிறது
இது தொடர்பாக பொதுமக்கள் நிறைய புகார் அளித்தும் ஒப்பந்ததாரர் மீது மாநகராட்சி நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை இந்த நிலைமை தொடர்ந்து நீடித்துக் கொண்டுதான் உள்ளது
உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை என்றால் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக வெற்றிக்கழக மாநகர நிர்வாகியும் முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் ஆனந்தகுமார் தெரிவித்தார்