தூத்துக்குடியில் எலும்பு மற்றும் மூட்டு விழிப்புணர்வு வார விழா
தூத்துக்குடி எலும்பு மற்றும் மூட்டு விழிப்புணர்வு வார விழாவை முன்னிட்டு தமிழ் நாடு முட நீக்கியல் மாநிலத் தலைவர் போராசிரியர் டாக்டர் மணிகண்டன், மாநில இணைச் செயலாளர் டாக்டர் மாரிமுத்து, தெற்கு மண்டலச் செயலாளர் டாக்டர். பாலக்கண்ணன், நெல்லை ஆர்த்தோ கிளப் உறுப்பினர்கள் டாக்டர். ஜேம்ஸ் சுந்தர் சிங் மற்றும் டாக்டர் மகிழ்ஜீவன் ஆகியோர் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவனை நேரில் சந்தித்தனர்.
சங்கத்தின் 2025 கருப்பொருளான “முதியோரக்கான முழுமையான பராமரிப்பு” அடிப்படையில், முதியோர்ருக்கான தனி சிகிச்சை பிரிவு மற்றும் சிறப்பு மருத்தவக் காப்பீடு திட்டம் ஆகிய இரு முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனு வழங்கினர். அமைச்சர் அந்த கோரிக்கையை பெற்றுக் கொண்டு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
பின்னர் ஜீவன் மருத்தவமனை சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு முகாமில் டாக்டா்கள் முதியோர் தடுமாறி விழுதல் தடுப்பு குறித்தும், முதியோரின் எலும்பு ஆரோக்கியத்தை பாதுகாப்பது, விழிப்புணர்வை ஏற்படுத்துவது ஆகியவற்றை பற்றியும் முதியோர்களிடம் கலந்துரையாடல் நடத்தினர்.
பின்னா் சுமார் 100 முதியவர்களுக்கு எலும்பு அடர்த்தி பரிசோதனை பார்க்கப்பட்டு இலவச மருத்துவ ஆலோசனைகளுடன மருந்துகளும் வழங்கப்பட்டது.