கே வி முகமது அரியலூர் செய்தியாளர்:
அரியலூரில் நடந்தது நகர பாட்டாளி மக்கள் கட்சி நகர வன்னியர் சங்கம் செயல் வீரர்கள் கூட்டம் அரியலூர் சென் மேரிஸ் திருமண மண்டபத்தில் நடந்தது அரியலூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி செயலாளர் ரவி தலைமை தாங்கினார்
மாநில வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி கூட்டத்தில் சிறப்புரையாற்றினார் அவர் கூறுகையில் பூம்புகாரில் வருகிற பத்தாம் தேதி நடைபெறும் மகளிர் திருவிழா மாநாட்டில் திரளாக கலந்து கொள்ள வேண்டும் அரியலூர் மாவட்டத்தில் இருந்து அதிக அளவில் மகளிர் கலந்து கொள்ள வேண்டும் என நிர்வாகிகளிடம் அவர் கேட்டுக் கொண்டார்
பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட தலைவர் வழக்கறிஞர் திருமாவளவன் மாவட்ட தொழிற்சங்க செயலாளர் கரிகாலன் மாநில வன்னியர் சங்க துணை தலைவர் தங்க ராமசாமி மாநில இளைஞர் சங்க செயலாளர் பாஸ்கர் வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் கொளஞ்சி அரியலூர் ஒன்றிய செயலாளர் செம்மலை நகர பாட்டாளி மக்கள் கட்சி நகர செயலாளர் ஜிகே அருள் பாட்டாளி மக்கள் கட்சி நகர தலைவர் செந்தில்குமார் வன்னியர் சங்க நகர தலைவர் முருகன் வன்னியர் சங்க நகர செயலாளர் சாத்தையாவெற்றி உட்பட ஏராளமானோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர் சாத்தையா வெற்றி அனைவருக்கும் நன்றி கூறினார்