புழல் அடுத்த கடப்பா ரோடு சந்தோஷ் நகரில் பிவிஆர் என்ற வணிக வளாகம் உள்ளது இந்த வளாகத்தில் புதியதாக டாஸ்மார்க்
ஒயின் ஷாப் நிறுவப்படுவதை தொடர்ந்து அங்கு மது பாட்டில்கள் இறக்குமதி செய்து கொண்டிருந்தனர்.

இதனைக் கண்ட பொதுமக்கள் உடனே அப்பகுதி மாமன்ற உறுப்பினர் ஏழுமலையை தொடர்புகொண்டு தகவல் தெரிவித்ததில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாமன்ற உறுப்பினர் மற்றும் அனைத்து கட்சியைச் சார்ந்த பிரமுகர்கள் அங்கு கூட்டமாக கூடி ஒயின்ஷாப் வருவதற்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர்.

அருகில் பள்ளி மாணவ மாணவிகள் நடந்து செல்லும் வழியாக உள்ளதாலும் தனியார் பெண்கள் தையல் நிறுவனம் மற்றும் பொதுமக்கள் , அதிகம் கூடும் இடமாக இருப்பதால் பல பிரச்சனைகள் வரக்கூடும் என கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இது தகவல் அறிந்த கொளத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையர் குமார் உதவி ஆணையாளர் சத்யன் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் மற்றும் போலீசார் டாஸ்மார்க் நிர்வாகிகளிடம் பேசி அனுமதி இல்லாமல் இந்த இடத்தில் உங்களுக்கு வைக்க யார் அனுமதி கொடுத்தது முறையான அனுமதி பெற்ற பின்பு இந்த இடம் அல்லாது வேறு இடம் பார்த்துக் கொண்டு இதனை உடனே காலி செய்யுமாறு அறிவுறுத்தினர் அதன் பேரில் ஒயின் ஷாப் நிர்வாகிகள் இடத்தை காலி செய்வதாக உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

சொன்னபடி ஒயின் ஷாப் நிர்வாகிகள் இடத்தை காலி செய்ய மருத்துவர் வந்தால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் மாதவரம் பகுதி செயலாளர் கமலநாதன் தலைமையில் அக்கட்சியை சேர்ந்வர்கள் ஒன்று கூடி உடனே இந்த இடத்தை காலி செய்து கொடுக்குமாறு அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *