திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள விருப்பாச்சிபுரம் ஸ்ரீ காமாட்சி அம்மன் சமேத ஶ்ரீ ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்தில் ஆடி மாத நான்காவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு மதியம் அபிஷேக ஆராதனைகள், தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் அருட்பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.
மாலை 6- மணிக்கு சுமங்கலிகள் கலந்து கொள்ளும் குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. பூஜையில் நூற்றுக்கும் மேற்பட்ட சுமங்கலிகள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். அதனை தொடர்ந்து அம்மனுக்கு தீபாராதனை நடைப்பெற்று பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் அருட்பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் பூஜைகளை ஆலய அர்ச்சகர் விருப்பாட்சிபுரம் சிவஸ்ரீ ஏ.குமார் சிவாச்சாரியார், ஸ்ரீ பெரியநாயகி சமேத ஶ்ரீ கைலாசநாதர் ஆலய அர்ச்சகர் ராஜகுரு, ஜெகன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
குத்துவிளக்கு பூஜை விழா ஏற்பாடுகளை ஆலய அர்ச்சகர் விருப்பாட்சிபுரம் சிவஸ்ரீ ஏ. குமார் சிவாச்சாரியார், கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் கிராமவாசிகள் சிறப்பாக செய்திருந்தனர்.