கோவை செல்வபுரம் பகுதியில் கிருஷ்ணசாமி ஆச்சாரியார் நினைவாக நடைபெற்ற மாபெரும் இலவச மருத்துவ முகாம் ஐநூறுக்கும் மேற்பட்ட ஆண்கள்,பெண்கள்,குழந்தைகள் மருத்துவ முகாமில் பங்கேற்பு
கோவையில் தெலுங்கு உள்ளூர் விஸ்வகர்மா உறவின்முறை சங்கம் மற்றும் கற்பக மருத்துவமனை இணைந்து பொதுமக்களுக்கான மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது..
கிருஷ்ணசாமி ஆச்சாரியார் நினைவாக செல்வபுரம் சக்தி மண்டபத்தில் நடைபெற்ற மருத்துவ முகாமை தெலுங்கு உள்ளூர் விஸ்வகர்மா உறவின்முறை சங்கத்தின் துணைத் தலைவர் ஏ கே வேலுச்சாமி இணைச் செயலாளர் கே மயில்சாமி ஆகியோர் இணைந்து செய்திருந்தனர் முன்னதாக மருத்துவ முகாம் துவக்க விழாவில் சங்கத்தின் நிறுவனர் அஞ்சலி சீனிவாசன் துவக்கி வைத்தார்..
இதில் சங்கத்தின் தலைவர் கிருஷ்ணராஜ்,உறவின் முறை தலைவர் அன்பு,ஆகியோர் முன்னிலை வகித்தனர் விழாவில் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், விஸ்வகர்மா அனைத்து சமூக சங்க நிர்வாகிகள்,பல்வேறு அமைப்புகளின் முக்கியஸ்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்…
பொதுமக்களின் நலன் கருதி இலவசமாக நடைபெற்ற மருத்துவ முகாமில், பொது மருத்துவம் கண் பரிசோதனை மகளிர் மருத்துவம் பொது அறுவை சிகிச்சை ரத்த அழுத்த பரிசோதனை இசிஜி ரத்த சர்க்கரை பரிசோதனை காது மூக்கு தொண்டை பரிசோதனை என பல்வேறு நோய்களுக்கான பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு இதற்கு தேவையான ஆரம்ப மருந்துகளும் வழங்கப்பட்டது….