சென்னை மணலி புதுநகர் அருள்மிகு ஸ்ரீ நாகாத்தம்மன் ஆலய 27 ஆம் ஆண்டு ஆடி திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது
500 பெண்கள் பால்குடம் எடுத்து அலகு குத்தியும் தீச்சட்டி எந்தியும் நேர்த்திக்கடன்
சென்னை மணலி புதுநகர் உள்ள 75 ஆண்டுகள் பழமை வாய்ந்த புற்றுக் கோவிலில் திருமணத்தடை நாக தோஷம் புத்திர பாக்கியம் தடையை நீக்குவதற்கான மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ நாகாத்தம்மன் ஆலயத்தில் ஆண்டு தோறும் ஆடி திருவிழா நடைபெறுவது வழக்கம், அதன்படி இன்று 27 வது ஆண்டு ஆடி திருவிழாவை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை அன்று கோவிலில் பந்தக்கால் நடப்பட்டு கோ பூஜையுடன் விழா தொடங்கியது.
தொடர்ந்து கணபதி ஹோமம் பாலாபிஷேகம் மகாபிஷேகம், கலச அபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நாகாத்தம்மனுக்கு நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து இன்று கன்னி கோயில் மேடு அருள்மிகு ஸ்ரீ மகா கன்னியம்மன் ஆலயத்தில் இருந்து பம்பை உடுக்கை கேரளா செண்டை மேளம் மங்கள வாத்தியங்கள் முழங்க அனைவருக்கும் பெண்கள் அனைவரும் மஞ்சள் புடவை அணிந்து 500க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் முளைப்பாரி தீ செட்டி ஏந்தியும் அலகு குத்தியும் உற்சவர் அம்மனுடன் பெண்கள் சுமார் இரண்டு கிலோமீட்டர் ஊர்வலமாக சென்று பின்னர் நாகாத்த அம்மனுக்கு பாலபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பால் அபிஷேகங்கள் செய்யப்பட்டனர்,
பின்னர் பக்தர்களுக்கு ஆலய நிர்வாகம் சார்பில். பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.