போடிநாயக்கனூரில் கலைஞர் நூலகத்தை திறந்து வைத்த எம்பி தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பழைய பேருந்து நிலையத்தில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைக்கப்பட்டது அந்த நூலகத்தை தேனி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி ரிப்பன் பட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்க்கு திறந்து வைத்தார்.
இந்த விழாவில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணக்குமார் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ஜி பி ராஜா நகர திமுக செயலாளர் ஆர் புருஷோத்தமன் நகராட்சி நகர் மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் தலைமை செயற்குழு உறுப்பினர் எம் சங்கர் பொதுக்குழு உறுப்பினர் ராஜா ரமேஷ் போடி கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்பி ஐயப்பன் பேரூராட்சி மன்ற தலைவர்கள் பூதிப்புரம் கவியரசு பால்பாண்டியன் மேல சொக்கநாதபுரம் கண்ணன் காளி ராமசாமி குச்சனூர் பிடி ரவிச்சந்திரன் வடக்கு மாவட்ட திமுக ஐடி.விங்ஒருங்கிணைப்பாளர் மகேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.