சுதந்திர தின அறிவிப்பில் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் அறிவிப்பை சேர்த்து முதல்வர் ஸ்டாலின் அறிவிக்க வேண்டும் :
தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் சி.செந்தில்குமார் வலியுறுத்தல் :
முதல்வர் ஸ்டாலின் திமுக தேர்தல் வாக்குறுதி 181ல் சொன்னபடி பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு கோரிக்கை தொடர்ந்து வைத்து வருகிறது.
அரசு பள்ளிகளில் 15வது கல்விஆண்டிலும் தற்காலிக அடிப்படையில் பகுதிநேர ஆசிரியர்கள் உடற்கல்வி ஓவியம் கணினி தையல் இசை உள்ளிட்ட சிறப்பு பாடங்களில் பணி புரிந்து வருகின்றார்கள்.
தற்போது 12 ஆயிரத்து ஐநூறு ரூபாய் சம்பளம் தொகுப்பூதியமாக வழங்கப்படுகிறது.
இதுவரை பணி நிரந்தரம் செய்யப்படாத நிலையில் மே மாதம் சம்பளம், போனஸ், மருத்துவ காப்பீடு, மரணம் அடைந்த குடும்பத்திற்கு நிவாரணம், வருங்கால வைப்பு தொகை உள்பட எதுவுமே வழங்கப்பட வில்லை.
இதனால் இந்த கால விலைவாசி உயர்வில் தற்போதைய குறைந்த சம்பளம் 12,500 ரூபாயை வைத்து கொண்டு வீட்டு வாடகை, மருத்துவ செலவு, குழந்தைகள் படிப்பு, கேஸ், மளிகை பொருட்கள், பண்டிகை கால செலவு, சுப காரிய செலவு உள்ளிட்ட அடிப்படை தேவைகளை செய்து கொள்ள முடியவில்லை.
குடும்ப தேவைகளுக்கு கடன் வாங்கி, வட்டி கட்டி மிகவும் சிரமப்படுகின்றார்கள்.
இதற்கு ஒரே தீர்வு பணி நிரந்தரம் செய்து காலமுறை சம்பளம் வழங்கப்பட்டால் மட்டுமே கிடைக்கும்.
எனவே முதல்வர் ஸ்டாலின் ஒரு நல்ல முடிவு எடுத்து நீண்ட காலமாக தொகுப்பூதியத்தில் தற்காலிகமாக பணிபுரியும் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரம் மேம்பட திமுக தேர்தல் வாக்குறுதி 181ன்படி பணி நிரந்தரம் வழங்க வேண்டும்.
சுதந்திர தினத்தை ஒட்டி வெளியிட உள்ள அரசின் அறிவிப்புகளில் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதற்கான அறிவிப்பையும் முதல்வர் ஸ்டாலின் சேர்க்க வேண்டும்.
ஆகஸ்ட் 14 ந்தேதி நடக்கிற அமைச்சரவை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்கின்ற நல்ல முடிவை தமிழக அரசின் கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும்.
—
சி.செந்தில் குமார்
தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
செல்: 9487257203