கோடை புனித சலேத் மாதா திருவிழாவிற்கு இ-பாஸ் முறையை ரத்து செய்ய கிறிஸ்தவ வன்னியர் இளைஞர் சங்க மாநிலத் தலைவர் மைலாப்பூர் வேளாங்கன்னி தமிழக அரசுக்கு கோரிக்கை
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உலகப்புகழ் பெற்ற புனித சலேத் மாதா திருத்தலம் உள்ளது. இந்த தேவாலயத்தில் இருக்கும் சலேத் மாதா சுரூபம் பிரான்ஸ் நாட்டிலிருந்து கொண்டுவர பட்டது. ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 14, 15 தேதிகளில் சலேத் மாதாவின் திருவிழாவானது கொண்டாடப்படுகிறது.
இந்த திருவிழாவில் உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு புனித சலேத் அன்னையை தரிசித்து செல்வது வழக்கமாக உள்ளது. இந்த ஆண்டு கொடைக்கானல் செல்வதற்கு தற்போது இ பாஸ் முறை அமலில் உள்ளதால் ஆகஸ்ட் 14, 15 தேதிகளில் அனைத்து வகையான பக்தர்களும் கோடை புனித சலேத் மாதா திருவிழாவில் கலந்து கொள்ளும் விதமாக இ பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டுமென்று கிறிஸ்தவ வன்னியர் இளைஞர் சங்கத்தின் சார்பாக கேட்டுக் கொண்டார்