தமிழக முதல்வரின் தாயுமானவர் திட்டம் கடையநல்லூரில் துவக்கி வைப்பு
தென்காசி ஆகஸ்ட் – 13 –
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சிக்கு உட்பட்ட 25 வது வார்டில் கடையநல்லூர்நகரமன்றதலைவர் மூப்பன்ஹபீபுர் ரஹ்மான் அவர்கள் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
தமிழக முதலமைச்சர் இந்த திட்டத்தினை சென்னையில் துவக்கி வைத்த நிலையில் கடையநல்லூர் பகுதிகளில் வயது முதிர்ந்தவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு நேரடியாக ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு கொடுமைப் பொருட்களை நேரடியாக அவர்களின் வீட்டிற்கு சென்று வழங்கும் திட்டம் துவக்கி வைக்கப்பட்டது
இதனால் மாற்றுத்திறனாளிகள் வயது முதிர்ந்தவர்கள் தங்களுடைய குடிமை பொருட்களை நேரடியாக வீட்டில் இருந்தவாறு பெற்றுக்கொள்வது இலகுவாக்கப்பட்டுள்ளது
இந்த திட்டத்தை துவக்கி வைத்த கடையநல்லூர் நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபீப் ரஹ்மான் கூறும்பொழுது இந்த நல்ல திட்டம் பொதுமக்களின் தேவைகளை உணர்ந்து வழங்கும் அரசாக இந்த அரசு செயல்படுவதாகவும் மக்களின் நலம் தாக்கும் விஷயங்களில் தாயுமானவர் திட்டம் மிகவும் முன்னோடியாக இருக்கும் என்றும் இதில் பயன்படக்கூடிய அனைத்து குடிமை பொருள் பெறுபவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைவார்கள் என்று பெருமிதமாக கூறினார்.
குடிமைப் பொருட்களுடன் துவக்கி வைக்கப்பட்ட வாகனமானது இந்த பகுதியில் இன்று முழுவதும் அவர்களின் தேவை உணர்ந்து உடனுக்குடன் பொருட்களை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது இந்நிகழ்ச்சியில் குடிமை பொருட்கள் தாசில்தார் மற்றும் பேச்சியப்பன் மற்றும் குடிமை பொருள் ஊழியர்கள் மற்றும் கடையநல்லூர் நகர இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சுகுமார் மற்றும் மதன் முருகானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர் மக்களின் குறைகளை உடனுக்குடன் கேட்டு அறிந்து தீர்வு காணும் சிறந்த நகர மன்ற தலைவராக மூப்பன் ஹபீப் ரஹ்மான் செயல்படுவதாக பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.