செயல்முறை விளக்கம்.
கேஸ் ஸ்டவ்வில் குக்கர் மூலம் சாதம் மற்றும் அசைவம் சமைக்கும் போது 3 அல்லது அதற்கு மேல் விசில் செட் செய்து வைத்து விடவேண்டும். அப்படி செய்யும் போது, நீங்கள் செட் செய்த கருவி மூலம் 3 விசில் வந்த உடன் அடுப்பு தானாக அணைந்து விடும். இப்படி ஒரு கருவியை கோரிப்பாளையம் சாய்ராம் வித்யாலயா பள்ளி மாணவிகள் தியாஸ்ரீ, தனிஷா மற்றும் ஸ்வானிகா ஆகியோர் கண்டு பிடித்துள்ளனர். பள்ளி முதல்வர் லெட்சுமி , அனைத்து அறிவியல் ஆசிரியர்கள் மற்றும் வழிகாட்டி ஆசிரியர் அப்துல் ரஷாக் ஆகியோர் மாணவியரை பாராட்டினர்.
அடுப்பின் செய்முறை விளக்கம்…..
கேஸ் ஸ்டவ்வில் மேல் பகுதில் ஒரு ஸ்டாண்டு போன்று அமைப்பு உள்ளது. இதில் ஒரு ஸ்டாண்டு நேராகவும் மற்றவற்றை குறுக்காவும் அமைந்துள்ளது. அதில் குறுக்கே உள்ள ஸ்டாண்டு மேலே அல்லது கீழே நகர்த்தும்படி அமைக்கப் பட்டுள்ளது. குறுக்கே உள்ள ஸ்டாண்டில் ஒரு சுவிட் வைக்கப்பட்டுள்ளது.
குக்கரை அதில் படும்படி அமைக்கும் போது ,விசில் ஒவ்வொரு முறைபடும் போது நாம் வைத்த விசில் 3 அல்லது 4 எண்ணிக்கை முடிந்தவுடன் அடுபாபு தானாக அணைந்துவிடும்.இக்கருவியை பயன்படுத்தினால் விபத்து, மற்றும் வீணாகும் நேரம் பாதுகாப்பானதாக,நாம் வேறு வேலைகள் செய்வதற்குப் உதவியாய் இருக்கும்.
இந்த அடுப்பு மக்களுக்கு ஓர் அரிய கண்டிப்பாகவும், உதவியாகவும் இருக்கும் என மாணவியர் தெரிவித்தனர்.