கும்பகோணம் ராயல் ஹார்டுவேர்ஸ் ஷோரூம் திறப்பு விழா

கும்பகோணம் உழவர் சந்தை அருகில் ராயல் ஹார்டுவேர்ஸ் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு தொழிலதிபர் முஜிபுர் ரஹ்மான் தலைமை தாங்கினார்.
இன்ஜினியர் முகமது ரபி, தொழிலதிபர்கள் முகமது ஜியாவுதீன், வடிவேலன், மோகன
சுந்தரம், செந்தில், நசீர்அகமது ஆகியோர் முன்னிலை வைத்தனர். அனைவரையும் அஸ் ஸலாம் கல்லூரி நிறுவன இணைச் செயலாளர் சிராஜுதீன்
வரவேற்றார்.

ஷோரூமினை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் எம்.பி கல்யாணசுந்தரம் ஆகியோர் திறந்து வைத்தனர்.

விழாவில் நிர்வாக இயக்குனர்கள் பஜுல் நூர், முகமது ரியாஸ் ஆகியோர் கூறியதாவது:-

கும்பகோணத்தில் 2000 சதுர அடி பரப்பளவில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஸ்டீல் கதவுகள்,இன்டீரியர் பொருட்கள் மற்றும் மாடுலர் கிச்சன் உபகரணங்கள் மற்றும் ஹார்டுவேர்ஸ் பொருட்கள் வாடிக்கையாளர்கள் மனம் கவரும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. சுதந்திர தின மற்றும் திறப்பு விழா சலுகை வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தார்.

விழாவில் துணை மேயர் சுப. தமிழழகன்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்எல்ஏ ராமா ராமநாதன்,மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட நிர்வாகிகள் ரஹ்மத் அலி,பரகத்துல்லா, கிஸ்வா நிர்வாகிகள் மற்றும் அரசியல் கட்சி மற்றும் வர்த்தக பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் விஜயகுமார் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *